உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 02, 2018

அ நிறம் | அளவு
கேரள மாநிலம் குன்னங்குளம் தாலுக்கா ஆர்தாட் என்னும் இடத்தில் உள்ள ஹோலி கிராஸ் சீனியர் செகண்டரி பள்ளியில் 8ஆம் வகுப்பு படிப்பவர் கண்ணன். இவர் காலையில் பள்ளிக்குச் செல்லும்வழியில், ஒருவர் தனது ஸ்கூட்டரிலிருந்து விழுந்து அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்தார். சுற்றியிருந்தவர்கள் விபத்தைப் பார்த்துவிட்டுக் கடந்து செல்வதும், வீடியோ எடுப்பதுமாக இருந்தனர். ஆனால், கண்ணன், வழியில் வந்த ஓர் ஆட்டோவில் காயம்பட்டவரை ஏற்றிச்சென்று மருத்துவமனையில் சேர்த்தார்.
பள்ளிக்குத் தாமதமாக வந்த கண்ணன், ஆசிரியரிடம் காரணத்தைச் சொன்னார். கண்ணனை, மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர். விபத்தில் பாதிக்கப்பட்டவரும், கண்ணனுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்திருக்கிறார்.
