sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சின்ன பூச்சி கெட்ட பூச்சி

/

சின்ன பூச்சி கெட்ட பூச்சி

சின்ன பூச்சி கெட்ட பூச்சி

சின்ன பூச்சி கெட்ட பூச்சி


PUBLISHED ON : ஏப் 25, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 25, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உலகம் எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு உரியது. ஒவ்வொரு உயிரினமும் தான் வாழ்வதற்காகவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவும் பல்வேறு வகையான உத்திகளை மேற்கொள்கின்றன. ஓர் உயிரினத்தின் வாழ்க்கைப் பாதுகாப்பு நடவடிக்கை இன்னொரு உயிரினத்திற்கு தீங்கு விளைவிப்பதாக ஆவதற்கு இதுவே காரணம். சாதாரணத் தொந்தரவு செய்யும் கரப்பான் பூச்சி முதல் மலேரியா போன்ற உயிர் பறிக்கும் நோய்களைப் பரப்பும் கொசுக்கள் வரை பல்வேறு உயிரினங்களால் மனிதன் தொல்லை அனுபவிக்கிறான்.

தொல்லை தரும் உயிரினங்கள்

நோய் பரப்பி (வெக்டர்/Vector): இவை மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும். ரத்தம் உறிஞ்சியும், நோய்க் கிருமிகளைப் பரப்பியும் தொற்று வியாதிகளை உருவாக்கும்.

நோய் பரப்பிகளின் வகைகள்

வீட்டு ஈ (மஸ்கா டொமஸ்டிகா/Musca Domestica): குடியிருப்புப் பகுதிகளில் கழிவு நீர் தேங்கியிருக்கிற இடங்களில் ஈக்கள் அதிகம் காணப்படுகின்றன. அழுகிய, சிதைக்கப்பட்ட பொருட்களை இவை உணவாக உட்கொள்கின்றன. அதிலிருக்கும் நோய் பரப்பும் கிருமிகள் மனிதர்களுக்குப் பரவுகின்றன. டைபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு போன்றவை ஈக்களால் பரவுகின்றன.

மணல் ஈ (ஃபிலிப்போடோமஸ் பாப்படாசி/Phlebotomus Papatasi): மிகச் சிறிய உடல் அளவு உடையவை. பெண் மணல் ஈக்களுக்கு, துளைத்து உறிஞ்சும் வாய் இருக்கும். விலங்குகளின் ரத்தத்தை பெண் மணல் ஈக்கள் உறிஞ்சும். ஆண் மணல் ஈக்கள் ஒட்டுண்ணியாக வாழாது. இவை 'காலா அசர்' (Kala Azar) என்ற நோயைப் பரப்பக் கூடியவை. இந்த நோய்க்கிருமி உடலில் சேர்வதால் ரத்த சோகை, உடல் பலவீனம் போன்றவை ஏற்படும்.

எலி உண்ணி (ராட் ஃப்லீ/Rat Flea): எலி உண்ணி (சீனோப்ஸில்லா கெயோபிஸ்/Xenopsylla Cheopis) நோயுற்ற எலிகளில் காணப்படும். தோலின் வழியாக நிண நீர்ச் சுரப்பிகளைச் சென்றடையும். இதன் கிருமிகள், மனிதர்களுக்குக் கொள்ளை நோயை (பிளேக்/Plague) பரப்புகின்றன.

மனிதப் பேன் (பெடிகுலஸ் ஹ்யூமனஸ்/Pediculus Humanus): பேன்கள் மனித ரத்தத்தை உண்டு வாழும் புற ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தவை. பேன்கள் பரப்பும் நோய்க்கிருமிகளால் பல வகையான தொடர் காய்ச்சல்கள் ஏற்படுகின்றன.

கொசுக்கள் (Mosquitoes): கொசுக்கள் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. மனித ரத்தத்தை உறிஞ்சி வாழும் இவை தேங்கியிருக்கும் நீர்ப்பரப்புகளில் பெருகி வளர்கின்றன. அனேபிலஸ் (Anopheles), க்யூலக்ஸ் (Culex), ஏடெஸ் (Aedes) போன்றவை கொசுக்களின் முக்கிய வகைகள். அனோபிலஸ் கொசு மலேரியா நோயை உண்டாக்கும். க்யூலக்ஸ் கொசு யானைக்கால் நோயைப் பரப்பும். ஏடெஸ் கொசு வைரஸால் ஏற்படும் மஞ்சள் காய்ச்சல் நோய் பரவக் காரணமாகிறது.






      Dinamalar
      Follow us