PUBLISHED ON : டிச 03, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புற்றுநோய், நீரிழிவு போன்ற நோய்களை, அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கும் ஸ்மார்ட் டாய்லெட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் எம்.ஐ.டி. பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இதை உருவாக்கியுள்ளனர். 'ஃபிட்லூ' (FitLoo) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த டாய்லெட்டில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறுநீரில் கூடுதல் புரோட்டீன்கள் அல்லது குளூகோஸ் உள்ளதா என்பதை சென்சார்கள் தொடர்ந்து கண்காணிக்கும். நீரிழிவு அல்லது புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால், அதுகுறித்த விரிவான அறிக்கையை, பயனர்களின் ஸ்மார்ட்போனுக்கு, டாய்லெட் அனுப்பி வைக்கும். விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் விண்வெளி ஆய்வாளர்கள், இந்தத் தொழில்நுட்பத்தை ஏற்கெனவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

