PUBLISHED ON : டிச 03, 2018

அ நிறம் | அளவு
பக்கவாத நோயாளிகளும், இனி பியானோ கருவியை வாசித்து மகிழக்கூடிய வாய்ப்பை விஞ்ஞானிகள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். BrainGate என்று பெயரிடப்பட்டுள்ள சிறிய சிப் கருவியை, பக்கவாத நோயாளிகளின் மூளையில் பொருத்திய ஆய்வாளர்கள், அதைக் கணினியுடன் இணைத்தனர். மூளையிலிருந்து பெறப்படும் சிக்னல்கள், புரியக்கூடிய வகையில் மாற்றப்பட்டு, கணினிக்கு கட்டளைகளாக அனுப்பப்படும். இக்கருவி உதவியுடன், இசை மேதை பீத்தோவனின் பிரபல டியூன் ஒன்றை, பக்கவாத நோயாளி வெற்றிகரமாக வாசித்தும் காண்பித்தார்.
