உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
'லான்செட்' என்கிற மருத்துவ இதழ் சில முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், ஆஸ்துமாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வயது வந்தவர்களுக்கு உதவும் வகையில் பிரிட்டனில் உள்ள விஞ்ஞானிகள் சோதனை அடிப்படையில் ஒரு மாத்திரையை கண்டுபிடித்துள்ளார்கள். நோயாளிக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்ட பிறகு அவர்களிடம் நல்ல முன்னேற்றம் இருப்பதாக சோதனை முயற்சியில் தெரிய வந்துள்ளது. “இந்த ஆராய்ச்சியை எச்சரிக்கையுடன் கூடிய நேர்மறை சிந்தனையுடன் பார்க்கப்பட வேண்டும். மருந்துக் கடைகளில் ஆஸ்துமாவுக்கான ஒரு மாத்திரையாக விற்பனைக்கு வர நீண்ட காலங்கள் ஆகலாம்” என்று ஆஸ்துமா யு.கே. என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் சமந்தா வாக்கர் கூறி இருக்கிறார்.
