உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
சுற்றுலா இடங்களிலும் நினைவுச் சின்னங்களுக்கு அருகிலும் செல்ஃபி எடுப்பது அதிகரித்து வருகிறது. இதனால், எதிர்பாராத விதமாக விபத்துகளும் ஏற்படுகின்றன. இது தொடர்பாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆணையில், ''சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பிற்கும் காவலுக்கும் சுற்றுலா துறைகள் பொறுப்பேற்க வேண்டும். அதுவே, சுற்றுலா துறையை மேம்படுத்தும். அத்தோடு, ஆபத்தானவை என்று அடையாளம் காணப்பட்ட சுற்றுலா இடங்களில் எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட வேண்டும். அவற்றை நாளிதழ்கள், இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக விளம்பரப்படுத்த வேண்டும்' என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
