உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
உலக முழுவதும் இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில் மிக பிரபலமாகி இருக்கும் விளையாட்டு 'போகிமான் கோ'. இந்த விளையாட்டுக்கு ஆதரவு எந்த அளவு உள்ளதோ அந்த அளவுக்கு எதிர்ப்பும் அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் இதை விளையாடி கொண்டிருக்கும் போது சுடப்பட்டு உயிரிழந்த சோக நிகழ்வுகளும் நிகழ்ந்துள்ளன. இந்த நிலையில் ஈரான் அரசு, “போகிமான் கோ விளையாட்டால் சாலைகளில் விபத்துகள் ஏற்படலாம். இதனால் நாட்டு மக்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு” என்று கூறி இந்த விளையாட்டுக்குத் தடை விதித்துள்ளது.
