உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இதன்படி, சி.பி.எஸ்.இ. அமைப்பு, தங்கள் பள்ளிகளுக்கான பாடத் திட்டத்தை மாற்றி தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பெற்றோர்களின் கருத்துக் கேட்பு கூட்டம் டில்லியில் ஆகஸ்ட் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதில், பாடத்திட்டம், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருதல், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான பாடத் திட்டம் ஏற்படுத்துதல் போன்ற அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
