உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 15, 2016

அ நிறம் | அளவு
நாட்டின், 70ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, ஆகஸ்ட்23ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்கு வாழ்த்து அட்டைகளை தபாலில் அனுப்புதல்; மரக்கன்றுகள் நடுதல்; விடுதலைப் போராட்டத்தை நினைவுகூரும் சொற்பொழிவுகள் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகளின் நிறைவாக, ஆகஸ்ட் 23ல் நாடு முழுவதும் காலை, 11:00 மணிக்கு தேசிய கீதத்தை வாய்ப் பாட்டாக பாட வேண்டும் என்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
