PUBLISHED ON : ஜன 23, 2017

சீனாவில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர் பாடம் நடத்திவருகிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சாங்கியுங்-கை அடுத்த யோயாங் பகுதியில் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, மொத்தமே இரண்டு மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில், யாங் ஜின்யுவா என்பவர், 35 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 18 வயதில் வேலைக்கு சேர்ந்த அவருக்கு தற்போது 53 வயதாகிறது. இரண்டு மாணவர்களுக்கும், பாடம் சொல்லித் தருவதோடு, தினமும் சமைத்து உணவளிக்கிறார். இதுகுறித்து ஆசிரியர் யாங் ஜின்யுவா கூறுகையில், 'தொழில்தேடி பலரும் நகரத்துக்கு சென்றுவிட்டதால், இந்தக் கிராமத்தில் குறைந்த மக்களே உள்ளனர். அதனால்தான், பள்ளியிலும் மாணவர்கள் அதிகமாக இல்லை. இதைக் காரணம் காட்டி, இப்பள்ளி மூடப்பட்டால், இரண்டு மாணவர்களும் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு பள்ளிக்குதான் செல்ல வேண்டும். ஆசிரியராக எனக்கு அதிக பொறுப்புள்ளதால், வேறு வாய்ப்புகள் வந்தபோதும் தவிர்த்துவிட்டு இங்கேயே பணிபுரிகிறேன்.' என்று கூறினார்.

