PUBLISHED ON : ஜன 23, 2017

2016ம் ஆண்டு அதிகமாக பயன்படுத்திய பாஸ்வேர்டு பட்டியலில் '123456' என்ற பாஸ்வேர்டு முதலிடம் பிடித்துள்ளது. இணையப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதேசமயம், பாஸ்வேர்டு திருட்டு போன்ற பிரச்னைகளும் இணையப் பாதுகாப்புக்கு சவாலாய் உள்ளன. கீப்பர் செக்யூரிட்டி (Keeper Security) என்ற இணையப் பாதுகாப்பு நிறுவனம் பாஸ்வேர்டு குறித்து ஓர் ஆய்வு நடத்தியது. 'உலக மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளில், முதலிடத்தில் '123456' இருக்கிறது. '123456789' மற்றும் 'qwerty' ஆகிய பாஸ்வேர்டுகள் இரண்டாம் மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. அடுத்தடுத்த இடங்களில், '12345678', '111111', '1234567890', '1234567', 'password', '123123', '987654321' ஆகியன உள்ளன. 'qwerty'என்பது கீபோர்டுகளில் வரிசையாக காணப்படும் எழுத்துகளாகும். கடினமாக வைக்கப்படும் பாஸ்வேர்ட்களில் '1q2w3e4r' மற்றும் '123qwe' ஆகியவை இடம்பெற்றுள்ளன. சோம்பேறித்தனத்தால்தான், இதுபோன்ற எளிமையான பாஸ்வேர்டுகள் அதிகளவில் புழக்கத்தில் உள்ளன' என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

