தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தலையை உள்ளிழுக்காத ஆமை!

தலையை உள்ளிழுக்காத ஆமை!

தலையை உள்ளிழுக்காத ஆமை!


PUBLISHED ON : செப் 12, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 12, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலில் வாழும் ஆமைகளில் மிகப்பெரியது பச்சைக் கடல் ஆமை. மிக அகலமான, வழுவழுப்பான ஓடுகள் கொண்ட இவை, வெப்ப மண்டலக் கடல் பகுதிகளில் காணப்படும். இவ்வகை ஆமைகளின் ஓட்டின் கீழ்ப்புறம் பச்சை நிறக் கொழுப்புப் பகுதி இருப்பதால், இதற்கு பச்சை ஆமை என்று பெயர். இதன் உடலின் அளவோடு ஒப்பிடும்போது இதன் தலை மிகச் சிறியது. சிறிய பச்சை ஆமைகள், சிறு நண்டு, ஜெல்லி மீன், கடல் பஞ்சு போன்றவற்றை உண்கின்றன. வளர்ந்த பச்சை ஆமைகள் தாவர உண்ணிகள். கடற்புல், பாசி போன்றவையே பச்சை ஆமைகளின் உணவு.

பச்சை ஆமை முட்டை இட, தனது துடுப்புகளைப் பயன்படுத்தி கடற்கரை மணலில் குழி தோண்டி அதில் முட்டையிடும். பின்னர் அதை மூடிவிட்டு கடலுக்குத் திரும்பிவிடும். இரண்டு மாத காலம் கழித்து, குழியில் புதைக்கப்பட்ட முட்டைகளில் இருந்து ஆமைக்குஞ்சுகள் வெளியே வரும். சாதாரண ஆமைகளைப் போல தலையை உள் இழுத்துக்கொள்ளும் திறன் பச்சை ஆமைகளுக்கு இல்லை. பொதுவாகக் கடல் ஆமைகள் தங்கள் உடலைச் சூடாக வைத்திருப்பதற்கு ஆழமற்ற நீரின் மேற்பகுதியில் நீந்தும். ஆனால் பச்சை ஆமைகள் கடற்கரைக்கு வந்து சூரியக் குளியலே செய்யும்!

பச்சை கடல் ஆமை (Green Sea Turtle)

வாழ்நாள்: 80 ஆண்டுகள்

எடை: 318 கிலோ

ஓடு: 5 அடி நீளம்

இடும் முட்டைகள்: 100 முதல் 200 வரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us