PUBLISHED ON : ஏப் 30, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொழிற்சாலைகளில் மனிதர்களின் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ரோபோக்கள் ஆக்கிரமித்து வருகின்றன. சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன், ஒரு ரோபோ நாற்காலியை உருவாக்குகிறது. மரக்கட்டைகளைக் கைகளால் தூக்கும் விதம், துல்லியமாக இறக்கப்படும் ஆணி, மரச்சட்டங்களைப் பொருத்தும் முறை என்று ரோபோ அசத்துகிறது. 8 நிமிடம் 55 நொடிகளில் நாற்காலி தயாராகிவிடுகிறது. இந்த ரோபோவுக்கு, முப்பரிமாண கண்கள், கைகளில் துல்லிய சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. எதிர்காலத்தில், தானியங்கி விமானத் தயாரிப்பு தொழிற்சாலையில் இந்த ரோபோக்கள் பயன்படும்; அதற்கான முன்முயற்சி இது, என்றும் நயாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.