PUBLISHED ON : செப் 11, 2017
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நார்வே நாட்டின் ப்ளாட் ஆங்கேர் பகுதியில் ஒரு கிரானைட் மலை உள்ளது. உலகில் உள்ள மலைகளில் ஏறுவதற்கு கடினமான, ஆபத்தான வரிசையில் உள்ள இம்மலையில், முதல் நபராக ஏறி சாதனை படைத்துள்ளார், செக் நாட்டைச் சேர்ந்தவர் ஆடம் ஓன்ரா என்ற 24 வயது இளைஞர். இவரது பெற்றோரும் மலையேற்ற வீரர்கள் என்பதால், சிறுவயதிலேயே ஆடமை, மலையேற்றத்திற்கு அழைத்துச் செல்வார்களாம். அவர்களிடமிருந்தே மலையேறும் ஆசை பிறந்தது என்று கூறுகிறார். இதில் ஏறுவதற்காக 50 நாட்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். வரும் 2020ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக மலையேற்றமும் விளையாட்டுப்போட்டியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான பயிற்சியிலும் தொடர்ந்து ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் ஆடம்.

