PUBLISHED ON : செப் 11, 2017
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இனி கடைகளுக்குப் போகும்போது, பர்ஸோ, ஏ.டி.எம். கார்டுகளோ தேவையில்லை. வாங்கும் பொருட்களுக்கான பணத்தை, உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து, உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து எடுத்துக்கொள்வார்கள். இப்படி ஒரு மென்பொருளை உருவாக்க, சீனாவின் பிரபல வணிக நிறுவனமான அலிபாபா தொடர்ந்து சில ஆண்டுகளாக முயன்று வந்தது. ஆய்வுகள் முடிந்து, இப்போது சோதனை முயற்சியாக, இந்தப் புதிய முறையை தங்கள் கடைகளில் அறிமுகப்படுத்தி உள்ளது. எப்படி இந்த முறை செயல்படுகிறது, வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே பணம் எடுக்கப்பட்டுவிடும் அபாயம் உள்ளதா என்றெல்லாம் அங்கே மக்கள் குழம்பிப்போய் உள்ளனர். இது முழுமையான வெற்றி அடைந்தால், எதிர்காலத்தில் வெறும் கையுடன் எந்த கடைக்கும் சென்று பொருட்கள் வாங்கலாம்.

