உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 08, 2018
அ நிறம் | அளவு
மொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை, இந்த ஆண்டு மார்ச்- 31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கென இலவச அழைப்புக்கான எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 14546 என்ற எண்ணுக்கு, மொபைலில் இருந்து ஒரு அழைப்புவிடுத்தால், நம்மை, பதிவு செய்யப்பட்ட ஒரு குரல் வழிநடத்தும். அக்குரல் சொல்லும்படி செய்தாலே போதும். இதை உறுதி செய்துகொள்ள ஒன் டைம் பாஸ்வேர்ட் உங்கள் எண்ணுக்கு வரும். அதையும் உள்ளீடு செய்துவிட்டால், சில நிமிடங்களில் நமது மொபைல் எண்ணை ஆதாருடன் இணைத்துவிடலாம்.
