PUBLISHED ON : மே 29, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் அமைக்கப் பட்டுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில், பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், பூமியில் இல்லாத, சர்வதேச விண்வெளி நிலையத்தில் மட்டுமே காணப்படுகிற பாக்டீரியா வடிவத்திலான புதிய நுண்ணுயிரியை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ள உயிரினத்துக்கு சொலிபாசில்லஸ் கலாமி என்று பெயர் வைக்கப் பட்டுளளது.
இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவராகவும், விஞ்ஞானியாகவும் இருந்த ஏ.பி.ஜே.அப்துல் கலாம், விண்வெளி அறிவியலில் நிகழ்த்திய சாதனையை நினைவுகூரும் விதமாக, இப்பெயரைச் சூட்டியுள்ளதாக, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

