தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ராக்கெட் வேகத்தில் இந்திய இணையம்

ராக்கெட் வேகத்தில் இந்திய இணையம்

ராக்கெட் வேகத்தில் இந்திய இணையம்


PUBLISHED ON : மே 29, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 29, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக இணையதள பயன் பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஆனால், இணைய வேகத்தில் மற்ற உலக நாடுகளை விட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில், அதிவேக இணையச் சேவையை வழங்கும் நோக்கில், 3 தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் ஏவ உள்ளது. வரும் ஜூன் மாதம் ஜிசாட் -19 செயற்கைக்கோளும், அதைத் தொடர்ந்து, ஜிசாட் -11 மற்றும் ஜிசாட் -20 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படும்.

''சாதாரண ஜிசாட் செயற்கைக்கோள்கள் நிமிடத்துக்கு ஒரு ஜிகாபைட் என்ற அளவிலேயே பரிமாற்றம் செய்யும். ஆனால், ஜிசாட் -19 வகை செயற்கைக் கோள்கள், நிமிடத்துக்கு நான்கு ஜிகாபைட் அளவில் தரவுகளைப் பரிமாற்றம் செய்யும். ஜிசாட் -11, ஜிசாட் -19 மற்றும் ஜிசாட்- 20 செயற்கைக்கோள்களை ஏவிய பின், நிமிடத்துக்கு 60லிருந்து 70 ஜிகாபைட் வரை, தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியும்'' என்று அஹமதாபாத் தளத்தைச் சேர்ந்த ஸ்பேஸ் அப்ளிகேஷன்ஸ் சென்டர் இயக்குநர் தபன் மிஸ்ரா கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us