PUBLISHED ON : பிப் 24, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எப்சிலன் டி (Epsilon d) கோள் பூமியிலிருந்து 10 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
ரீல். உண்மையில் எப்சிலன் டி 300 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கொண்டு ஆராய்ந்தபோது இங்கு உயிர்கள் வாழத் தகுந்த சூழல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கோளில் தண்ணீர் திரவ நிலையில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் வளி மண்டலத்தில் ஆக்ஸிஜன், மீத்தேன் ஆகியவை உள்ளனவா என்று ஆராய செயற்கை நுண்ணறிவு உதவியுள்ளது.
எதிர்காலத்தில் மனிதர்கள் குடியேறத் தகுந்த கோள்கள் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளனவா என்ற ஆய்வு தீவிரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், எப்சிலன் டி கோள் பற்றிய ஆய்வு விஞ்ஞானிகள் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.