உயிரியல் உலகம்: கரையானும் எறும்பும் மட்டும் போதும்!
உயிரியல் உலகம்: கரையானும் எறும்பும் மட்டும் போதும்!
PUBLISHED ON : பிப் 24, 2025

சில உயிரினங்கள் கரையானையோ, எறும்பையோ உண்கின்றன. இத்தகைய உணவுப் பழக்கம் மிர்மெகோபாஜி (Myrmecophagy) எனப்படுகிறது.
பல்லி, ராட்சத பல்லி, பாம்பு, தவளை, தேரை உள்ளிட்ட ஊர்வன விலங்குகள் எறும்புகளையும் கரையான்களையும் உண்கின்றன. பெரும்பாலான பறவைகளிலும் இந்த உணவுப் பழக்கம் இருக்கிறது. இவற்றுள் முக்கியமானது எறும்புப் பறவை (Ant bird). எறும்புண்ணி, ஆர்மடில்லோ (Armadillos), முள்ளம்பன்றி, சோம்பல் கரடிகள் (Sloth Bears), உள்ளிட்ட பாலூட்டிகளும் கரையான்களையும் எறும்புகளையும் உண்கின்றன.
இந்த உணவுப் பழக்கத்தைக் கொண்ட விலங்குகளுக்கு, தங்கள் உணவை எளிதில் பிடிக்கவும் உண்ணவும் உதவும் வகையில் உடல் அமைப்புகள் இருக்கும். இவற்றின் நீளமான, ஒட்டும் தன்மையுள்ள நாக்குகள், பூச்சிகளைப் பிடிக்க உதவுகின்றன. இவற்றின் கால்கள் அவற்றின் கூடுகளை உடைக்க உதவுகின்றன.