PUBLISHED ON : ஏப் 14, 2025

GJ 667Cc கோள் பூமியை விட அதிகமான ஈர்ப்பு விசையை உடையது.
ரியல். க்ளைஸ் (Gliese) 667Cc என்று அழைக்கப்படும் இந்தக் கோள் பூமியிலிருந்து 22 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. பூமியை விட 3.8 மடங்கு அதிக நிறையை உடையது. தென் அமெரிக்க நாடான சிலியில் அமைந்துள்ள ஐரோப்பியத் தென்னக ஆய்வகத்தின் தொலைநோக்கி மூலமாக 2013ஆம் ஆண்டு இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது ஒரு சிவப்புக் குள்ள நட்சத்திரத்தை வெறும் 28 நாட்களில் சுற்றி வருகிறது. இந்த நட்சத்திரம் நமது சூரியனை விடக் குறைவான வெப்பத்தை உடையது. அதாவது இந்த நட்சத்திரத்துடைய மேற்பரப்பு வெப்பநிலை 3,400 டிகிரி செல்சியஸ் தான்.
GJ 667Cc பூமியைப் போலவே பாறைகளாலான கோள். பூமியில் ஒரு மனிதரின் எடை 75 கிலோ என்றால் அந்தக் கோளில் 120 கிலோ எடை இருப்பார். அதாவது இதனுடைய ஈர்ப்பு விசை பூமியை விட 1.6 மடங்கு அதிகம்.