PUBLISHED ON : அக் 23, 2023

ஒரே விதமான 16 நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது, ஒருபுறம் 'பூ' இருக்க வேண்டும், மறுபுறம் தலை இருக்க வேண்டும். எடுத்துவிட்டீர்களா?
இப்போது, முதலில் எல்லா நாணயங்களையும், 'தலை' காண்பது போன்று தரையில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து, பின்வருமாறு செய்து பார்த்து விடை என்ன என்று காணுங்கள்.
இப்போது, இரண்டாவது முறையாக, அனைத்து நாணயங்களில், இரட்டை வரிசையில் உள்ள 2, 4, 6, 8, 10, 12, 14, 16 ஆகிய நாணயங்களைத் திருப்புங்கள் ('பூ' பக்கம்).
மூன்றாவது முறையாக, முப்படை வரிசையில் உள்ள 3, 6, 9, 12, 15 ஆகிய நாணயங்களைத் திருப்புங்கள். நான்காவது முறையாக, நாற்படை வரிசையில் உள்ள, 4, 8, 12, 16 ஆகிய நாணயங்களை திருப்புங்கள்.
ஐந்தாவது முறையாக, 5, 10, 15 ஆகிய நாணயங்களையும், ஆறாவது முறையாக அறுபடை எண்களான 6, 12 ஆகிய நாணயங்களையும், ஏழாவது முறையாக 7, 14 ஆகியவற்றையும், எட்டாவது முறையாக 8, 16 ஆகிய நாணயங்களையும் திருப்புங்கள்.
இதுபோன்றே, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 ஆகிய வரிசையில் உள்ள நாணயங்களைத் திருப்புங்கள். கடைசியில், எந்தெந்த நாணயங்களில் 'தலை' உள்ளது?
விடை: 1, 4, 9, 16 ஆகிய நாணயங்களில் 'தலை' இருப்பதைக் காணலாம். இந்த வரிசையில் அமைந்த எண்கள் வர்க்க எண்கள் (Square numbers) என்று சிறப்பிக்கப்படுகின்றன.
நீங்கள் இதுபோல், 25 நாணயங்களைக் கொண்டு சோதித்துப் பார்த்தால், 1, 4, 9, 16, 25 ஆகிய வரிசையில் அமைந்த நாணயங்களில் 'தலை' இருப்பதைக் காணலாம். சரிபாருங்கள்!
