தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்

நான்கில் ஒன்று சொல்


PUBLISHED ON : அக் 23, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 23, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். விடை தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.

1. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் இந்திய ஜனாதிபதியான யாரின் உருவச் சிலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் திறந்து வைத்தார்?

அ. ராம்நாத் கோவிந்த்

ஆ. அப்துல் கலாம்

இ. பிரதீபா பாட்டீல்

ஈ. பிரணாப் முகர்ஜி

2. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும், எந்தத் திட்டத்தின் முதற்கட்ட சோதனை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் சமீபத்தில் நடந்தது?

அ. சந்திரயான்

ஆ. ஆதித்யா

இ. ஆஸ்ட்ரோசாட்

ஈ. ககன்யான்

3. தமிழகத்தில், அ.தி.மு.க. கட்சியின் எத்தனையாவது ஆண்டு தொடக்க விழா, கட்சியினரால் சமீபத்தில் கொண்டாடப்பட்டது?

அ. 52

ஆ. 55

இ. 50

ஈ. 58

4. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தமிழகத்தில் எத்தனை இடங்கள், கடுமையாகப் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ளது?

அ. 3,002

ஆ. 2,500

இ. 4,099

ஈ. 3,770

5. இந்தியாவின் எந்த இரு மாநிலங்களுக்கு, சமீபத்தில் புதிய கவர்னர்களை நியமித்து, ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்தார்?

அ. ஒடிசா, திரிபுரா

ஆ. கர்நாடகம், தெலங்கானா

இ. தமிழ்நாடு, கேரளம்

ஈ. மணிப்பூர், மஹாராஷ்டிரம்

6. சர்வதேச ஒலிம்பிக் போட்டியில், 128 ஆண்டுகளுக்குப்பின், எந்தப் போட்டி மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளது?

அ. மல்யுத்தம்

ஆ. கிரிக்கெட்

இ. செபக் டக்ரா

ஈ. கோல்ஃப்

7. நியூசிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலில், அந்த நாட்டின் தேசியக் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து, புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளவர்?

அ. கிறிஸ் ஹிப்கின்ஸ்

ஆ. கிரான்ட் ராபர்ட்ஸ்

இ. கிறிஸ்டோபர் லக்சன்

ஈ. வின்ஸ்டன் பீட்டர்ஸ்

8. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் லீக் போட்டியில், நடப்பு சாம்பியனான எந்த அணியை, 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைத்தது?

அ. இங்கிலாந்து

ஆ. ஆஸ்திரேலியா

இ. நியூசிலாந்து

ஈ. இலங்கை

விடைகள்: 1. ஆ, 2. ஈ, 3. அ, 4. ஈ, 5. அ, 6. ஆ, 7. இ, 8. அ.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us