PUBLISHED ON : ஜூன் 12, 2023

அ நிறம் | அளவு
டம்ளர் என்ன உயரம்?
இங்கே இரு படங்கள் உள்ளன. முதல் படத்தில் ஒரு டம்ளர் மீது நான்கு டம்ளர்கள் அடுக்கப்பட்டுள்ளன. அடுத்த படத்தில் ஒரு டம்ளர் மீது ஒரே டம்ளர் வைக்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்ட அளவுகளின்படி, டம்ளரின் உயரத்தைக் கணக்கிட வேண்டும். எப்படி?
விடை: 14 செ.மீ.
முழு டம்ளரின் உயரத்தை x என்க. அதன் அடுக்கை y என்க. ஆக, படம் 1ஐ, x+4y = 34 ...(1) என்ற சமன்பாடாகவும், படம் 2ஐ, x+y = 19 ...(2) என்ற சமன்பாடு வடிவிலும் எழுதலாம் அல்லவா!
சமன்பாடு (2)லிருந்து (1)ஐ கழித்தால்
=> x+4y--x--y = 34--19
=> 3y = 15
=> y=5 என கிடைக்கும்.
பிறகு, y=5ஐ சமன்பாடு (2)இல் பிரதியிட்டால், x+5 = 19
=> x = 19--5
=> x = 14 கிடைக்கும்.
ஆக, முழு டம்ளரின் உயரம் 14 செ.மீ.
