PUBLISHED ON : ஜூன் 12, 2023

உலகில் பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள் உடனே பதிலைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள்தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்.
1. சென்னை ஐ.ஐ.டி.யில், நுழைவுத் தேர்வு இல்லாமல் மாணவர்கள் படிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள புதிய, 'ஆன்லைன்' படிப்பு?
அ. எலக்ட்ரானிக் இஞ்சினியரிங்
ஆ. பி.எஸ். எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்
இ. ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ்
ஈ. கம்ப்யூட்டர் இஞ்சினியரிங்
2. இந்தியாவில், எந்த நாட்டின் பட்டு நூல் இறக்குமதி அதிகரிப்பால், பட்டுக்கூடு விலை தொடர்ந்து சரிந்து வருவதாக, பட்டு வளர்ச்சி விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.வி.ராஜகோபால் தெரிவித்தார்?
அ. சீனா
ஆ. ஜப்பான்
இ. அமெரிக்கா
ஈ. ரஷ்யா
3. ஐக்கிய நாடுகள் சபையின், 'யுனெஸ்கோ' நிறுவனம், சர்வதேச அளவில் சிறந்த உயிர்கோள காப்பக மேலாண்மை விருதை முதன்முறையாக, இந்தியாவைச் சேர்ந்த ஐ.எப்.எஸ். அதிகாரி பகான் ஜெக்தீஸ் சுதாகருக்கு வழங்கியுள்ளது. அவர், எந்த உயிர்கோள காப்பகத்தின் காப்பாளர் ஆவார்?
அ. அகத்தியமலை, கேரளம்
ஆ. திஹாங்-திபாங், அருணாச்சலப் பிரதேசம்
இ. மன்னார் வளைகுடா, ராமநாதபுரம்
ஈ. திப்ரு சைக்ஹவா, அசாம்
4. தமிழக அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு இருக்கைகள், 51,046இல் இருந்து, எவ்வளவாகத் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது?
அ. 61,464
ஆ. 60,500
இ. 55,377
ஈ. 58,069
5. ஆப்பிரிக்க நாடான எங்கு, சென்னை ஐ.ஐ.டி.யின் புதிய வளாகம் திறக்கப்பட உள்ளதாக, அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்தார்?
அ. அங்கோலா
ஆ. பெனின்
இ. லுவாண்டா
ஈ. தான்சானியா
6. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'டார்பிடோ' எனப்படும், குழாய் வடிவிலான நீர்மூழ்கிக் குண்டின் சோதனையை வெற்றிகரமாக நடத்தி, இந்திய முப்படைகளில் எது புதிய சாதனையைப் படைத்துள்ளது?
அ. விமானம்
ஆ. கடற்படை
இ. ராணுவம்
ஈ. பாதுகாப்பு
7. தென் அமெரிக்க நாடான எங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு, அந்நாட்டின் உயரிய, 'கிராண்ட் ஆர்டர் ஆப் தி செயின் ஆப் தி யெல்லோ ஸ்டோர்' என்ற விருது வழங்கப்பட்டது?
அ. பொலிவியா
ஆ. பிரேசில்
இ. சுரினாம்
ஈ. கயானா
விடைகள்: 1. ஆ, 2. அ, 3. இ, 4. அ, 5. ஈ, 6. ஆ, 7. இ.
