
தமிழ் எழுத்துகளில் வடிவ மாற்றங்கள்
தமிழ் மொழியிலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கை இருநூற்று நாற்பத்து ஏழு. இவற்றை நாம் இங்கு அச்சாகியுள்ள முறைகளில் எழுதிக் கொண்டுள்ளோம். இவ்வெழுத்துகள் யாவும் இன்றைய வடிவத்தில் தொன்று தொட்டு எழுதப்படவில்லை. காலந்தோறும் சிறிது சிறிதாக மேம்பட்டு, இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தன.
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு, 'அ' என்பது, இன்றுள்ளதுபோல் எழுதப்படவில்லை. இரண்டு சாய்கோடுகள் நேர்கோட்டில் முட்டி இருக்கும்படியாக எழுதப்பட்டது. இவ்வாறுதான் 'அ' எழுதப்பட்டது.
'ஈ' என்பதும் இன்றுள்ளதுபோல் எழுதப்படவில்லை. இவ்வாறுதான் எழுதப்பட்டது. ஒரு நேர்கோட்டின் இருபுறமும் புள்ளி வைக்கப்பட்டு 'ஈ' எழுதப்பட்டது.
'உ' என்பதும், முற்காலத்தில் இன்றுள்ளதுபோல் எழுதப்படவில்லை. L என்ற வடிவில்தான் எழுதப்பட்டது. அதிலுள்ள மேல்கீழ்க் கோடு சாய்வுற்று, முனையில் சுருள் அமைத்து உருவானதுதான் இன்றுள்ள 'உ' வடிவம்.
குறில் நெடில்களை எழுத்தால் எழுதிக் காட்டுவது, பல மாற்றங்களுக்கு ஆட்பட்டுக்கொண்டே இருந்தது. குறில் நெடில்களைத் தனித்தனி எழுத்துகளாக எழுதாமல், ஒரே எழுத்தில் எழுதினார்கள். படிப்பவர்தாம் தம் புலமையால் அவ்வெழுத்து குறிலா, நெடிலா என்று கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.
அதாவது, 'அ' என்ற எழுத்தும், 'ஆ' என்ற எழுத்தும் என்றே எழுதப்படும். சொற்றொடரில் அமையும் சொல்லையும் பொருளையும்கொண்டு, குறிலா நெடிலா என்று கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.
முற்காலத்தில், 'க' என்ற எழுத்தை + இவ்வாறுதான் எழுதினோம். அந்த எழுத்தின் வளர்ச்சியே இன்றைய 'க' ஆனது. இப்போது, 'கா' என்ற நெடில் எழுத்தை எழுதிக் காட்டுவதற்குத் துணைக்கால் இடுகிறோம். முற்காலத்தில் துணைக்கால் இடும் வழக்கம் இல்லை. குறில் வடிவின் அருகில் ஒரு புள்ளிவைத்து நெடில் என்றார்கள். 'கா' என்பது இவ்வாறு எழுதப்பட்டது.
எ, ஏ வரிசைக்கும், ஒ, ஓ வரிசைக்கும் குறிலுக்கும் நெடிலுக்கும் தனித்தனி எழுத்துகள் இருக்கவில்லை. 'எ' என்ற எழுத்தின்மேல் புள்ளிவைத்தால் குறில்
() புள்ளி இல்லையேல் நெடில் (ஏ). அவ்வாறே 'ஒ' என்ற எழுத்தின்மேல் புள்ளி வைத்தால் குறில்
(). புள்ளி இல்லையேல் நெடில் (ஒ). இவற்றை எ, ஏ, ஒ, ஓ என, குறில் நெடில்களாய்த் தனித்தனி எழுத்துகளாக்கியவர் வீரமாமுனிவர்.
காலந்தோறும் பலப்பல மாற்றங்களைக் கண்ட பிறகே, தமிழ் எழுத்துகள் இன்றைய வடிவத்திற்கு வந்துள்ளன.
- மகுடேசுவரன்

