உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூலை 31, 2023

அ நிறம் | அளவு
இங்கே இரு படங்கள் உள்ளன. படங்களில் உள்ள அளவுகளைப் பயன்படுத்தி, மேசையின் உயரம் காண்க.
விடை: 150 செ.மீ.
மேசையின் உயரத்தை A என்க. அதேபோல், முயலின் உயரத்தை B என்றும், ஆமையின் உயரத்தை C என்றும் வைத்துக் கொள்ளலாம்.
இப்போது முதல் படத்தில் உள்ள தகவலின்படி,
A+B-C = 170 செ.மீ. ...(i) என்று எழுதலாம் அல்லவா!
அதேபோல், இரண்டாம் படத்தில் உள்ள தகவலின்படி,
A-B+C = 130 செ.மீ. ...(ii) என்று எழுதலாம்.
ஆக, (i)+(ii) = A+B--C+A--B+C = 170+130
=> 2A = 300
=> A = 300/2
A = 150.
ஆக, மேசையின் உயரம் = 150 செ.மீ.
