உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 19, 2016

அ நிறம் | அளவு
மும்பையில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2ஆவது சுற்று 'பி' பிரிவு லீக் போட்டியில் மகாராஷ்டிரா, டில்லி அணிகள் மோதின. முதல் இன்னிங்ஸில் கேப்டன் ஸ்வப்னில் குகாலே (351*) அன்கித் பாவ்னே (258*) அசத்தினார்கள். 3ஆவது விக்கெட்டுக்கு 594 ரன்கள் சேர்த்து அவுட் ஆகாமல் இருந்ததன் மூலம், ஒட்டுமொத்த முதல்தர போட்டி வரலாற்றில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த 2ஆவது ஜோடியானது. ரஞ்சி கோப்பை அரங்கில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த முதல் ஜோடி என்ற வரலாறு படைத்தது. முடிவில் இந்தப் போட்டி 'டிரா' ஆனது.
