PUBLISHED ON : ஜன 06, 2020

அ நிறம் | அளவு
விண்வெளியில், மிக அதிக காலம் பயணம் செய்த பெண் என்ற சாதனையை அமெரிக்க விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கூக் படைத்துள்ளார். கடந்த வாரம் வரை கிறிஸ்டினா, 289 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்துள்ளார். மேலும், வரும் 2020 பிப்ரவரி வரை, அவர் விண்வெளியில் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது.
