PUBLISHED ON : ஜன 07, 2019

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டுதோறும் குளிர் காலத்தில் ஸ்டார்லிங்க்ஸ் (Starlings) எனும் வகைப் பறவைகள் ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிளம்பி, தென் இஸ்ரேலியப் பகுதிக்கு வருவது வழக்கம்.
கடந்த இரு வாரங்களாக இப்பறவைகள் கூட்டம், இஸ்ரேலின் நெகேவ் பாலைவனத்தைக் கவனிக்க வைத்துள்ளன. அங்கு தினசரி காலையில் வானில் ஒன்றுசேரும் ஸ்டார்லிங்க்ஸ் பறவைகள், விசித்திரமான வடிவங்களை உருவாக்கி வருகின்றன.
அபூர்வ வடிவங்களுக்கு மர்முரேஷன் (Murmuration) என்று பெயர். ''தங்களை வேட்டையாடும் உயிரினங்களைக் குழப்பி, அவற்றிடமிருந்து தப்பவே பிரமாண்டமான சுருள் வடிவத்தை ஏற்படுத்துகின்றன” என்று டெல்அவிவ் நகரப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பறவையியல் ஆய்வாளர் யோசி லெஷம் (Yossi Leshem) தெரிவித்துள்ளார்.

