PUBLISHED ON : மார் 12, 2018

சர்வதேச மகளிர் தினம், கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைச் சிறப்பிக்கும் விதமாக, ஏர் இந்தியா நிறுவனம் பெண் விமானிகளை மட்டுமே கொண்டு, 3 சிறப்பு விமானங்களை இயக்கி பெண்கள் தினத்தைக் கொண்டாடி உள்ளது.
பெண் விமானிகள், பெண் ஊழியர்களைக்கொண்டு ஒரே நாளில் மூன்று வழித்தடத்தில் பறந்த இவ்விமானங்கள், சென்னையிலிருந்து டில்லிக்கும், சென்னையில் இருந்து இலங்கைக்கும், சென்னையில் இருந்து அந்தமானுக்கும் பறந்தன. அதே தினத்தில், அங்கிருந்து திரும்பவும் சென்னைக்குத் திரும்பின.
1985ஆம் ஆண்டிலேயே, பெண் பணியாளர்களால் மட்டுமே இயக்கப்பட்ட முதல் விமானத்தை ஏர் இந்தியா இயக்கி சாதனை படைத்துள்ளது. அதனைத்தொடந்து, மகளிர் தினத்தை முன்னிட்டு தேசம் முழுவதும் பல விமான நிலையங்களில் இதுபோன்று முழுக்க பெண்களைக்கொண்டு விமானத்தை இயக்குவதை ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து செய்துவருகிறது.

