உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 28, 2023

அ நிறம் | அளவு
அனைவருக்கும் ஏகே 47 துப்பாக்கியைத் தெரிந்திருக்கும். அதைவிட நவீனமான ஏகே 203 துப்பாக்கியை கூட்டு முயற்சியாக இந்தியாவும், ரஷ்யாவும் தயாரித்து வருகின்றன. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம், அமேதியில் இந்தோ ரஷ்யன் ரைபில்ஸ் நிறுவனம் செயற்பட்டு வருகிறது. 5124 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இந்தியா, ரஷ்யா இடையே 2021இல் ஏற்பட்டது. 6.1 லட்சம் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்திய தயாரிப்பு இன்ஸாஸ் (INSAS), பழைய ஏகே 47 ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக இந்தத் துப்பாக்கிகள் படையில் சேர்க்கப்பட்டு வருகின்றன.
