தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/'ஆல்ரவுண்டர்' தமிழன்!

'ஆல்ரவுண்டர்' தமிழன்!

'ஆல்ரவுண்டர்' தமிழன்!


PUBLISHED ON : செப் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரவிச்சந்திரன் அஷ்வின்

17-.9.-1986, சென்னை, தமிழ்நாடு.

டில்லியில் 2011இல் நடந்த வெஸ்ட் இண்டீஸ், இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டியில்தான் அவரது முதல் டெஸ்ட் பயணம் தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியிலேயே ஒன்பது விக்கெட்டுகள் கைப்பற்றியது மட்டுமன்றி, 'ஆட்ட நாயகன்' (Man of the match) விருதும் வென்றார். அந்தத் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து, தான் ஒரு 'ஆல்ரவுண்டர்' என்பதையும் நிரூபித்தார் ரவிச்சந்திரன் அஷ்வின். குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்கிற உலக சாதனையை 2017இல் 54வது டெஸ்ட் போட்டியில் எட்டினார். முன்னதாக, 1981இல் ஆஸ்திரேலியாவின் டெனிஸ் லில்லி 56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அந்தச் சாதனையைப் படைத்திருந்தார்.

தனது பள்ளி, கல்லூரிப் படிப்பை சென்னையிலேயே பயின்றார். கிரிக்கெட் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் தொடக்க ஆட்டக்காரர், வேகப்பந்து வீச்சாளராக இருந்த இவரை பயிற்சியாளர்தான் சுழற்பந்துக்குத் திருப்பிவிட்டார்.

பந்துவீச்சில், ஆஃப்-பிரேக், லெக் பிரேக், ஆர்ம் பால், கேரம் பால், தூஸ்ரா, கூக்ளி என்று பலவிதங்களைக் கையாள்வதால் பேட்ஸ்மேன்கள் இவரை எதிர்கொள்ள அஞ்சுவார்கள். கேரம்போர்டில் காயினைச் சுண்டுவதற்கு கட்டை விரலையும் நடுவிரலையும் பயன்படுத்துவார்கள். அதே முறையில் பந்து நன்றாகச் சுழல வேண்டும் என்பதற்காக 'கேரம் பால்' என்கிற உத்தியைப் பயன்படுத்தி ஜொலிக்கத் தொடங்கினார். பேட்ஸ்மேனின் சாதக, பாதகங்களைக் கவனித்து அதற்கேற்ப வியூகங்களை மாற்றிப் பந்து வீசுவது இவரது பலம்.

சரியான வழியில், சரியான திட்டமிடலுடன் சென்றால் வெற்றி நிச்சயம் கிடைக்கும் என்று சொல்லும் அஷ்வின் குறுகிய காலத்தில் அதிக தொடர்நாயகன் விருது வாங்கிய இந்திய வீரராகவும் இருக்கிறார்.

விருதுகள்

2012 - 13: 'பிசிசிஐ' யின் 'பாலி உம்ரிகர்' (Polly Umrigar) விருது

2014: இந்திய அரசின் 'அர்ஜுனா விருது'

2016: ஐசிசி வழங்கிய 'ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்'

தொடக்கம் :

சர்வதேச ஒரு நாள் போட்டி: ஜூன், 2010 (எதிர் - இலங்கை)

டி20 : ஜூன், 2010 (எதிர் - ஜிம்பாப்வே)

டெஸ்ட்: நவம்பர், 2011 (எதிர் - வெஸ்ட் இண்டீஸ்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us