தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி

தேதி சொல்லும் சேதி


PUBLISHED ON : செப் 17, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 17, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்டம்பர் 17, 1915 - எம்.எஃப். ஹுசைன் பிறந்த நாள்

'இந்தியாவின் பிகாஸோ' எனப் போற்றப்படுபவர். ஓவியங்கள் மக்களுடன் பேச வேண்டும் என விரும்பினார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார்.

செப்டம்பர் 18, 1709 - சாமுவேல் ஜான்சன் பிறந்த நாள்

எளிமையான ஆங்கில அகராதியை உருவாக்கிய எழுத்தாளர். இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது நூல்கள் பிரெஞ்ச், டச்சு, ஜெர்மன், இத்தாலி, ரஷ்ய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 18, 2003 - உலக தண்ணீர் கண்காணிப்பு நாள்

நீர்நிலைகளைப் பரிசோதித்து, நீரின் தரம் குறையாமல் பாதுகாக்க வேண்டும். நீர் வளங்களைப் பாதுகாப்பதில் விழிப்புணர்வையும் ஈடுபாட்டையும் உருவாக்க இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

செப்டம்பர் 19, 1965 - சுனிதா வில்லியம்ஸ் பிறந்த நாள்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை. நாசா மூலமாக சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார். அங்கே அதிக நாட்கள் (322 நாட்கள்) தங்கிய பெண் என்கிற சாதனைக்குச் சொந்தக்காரர்!

செப்டம்பர் 21, 1987- உலக அமைதி நாள்

யுத்தங்களின் பாதிப்பை உணர்ந்து, உலகில் அமைதியை வலியுறுத்தவும்; நாடுகளிடையே போர் ஏற்படுவதைத் தடுக்கவும், ஐ.நா. சார்பில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

செப்டம்பர் 22, 1791 - மைக்கேல் ஃபாரடே பிறந்த நாள்

மின்சாரத்தின் தந்தை. கம்பிச் சுருளுக்குள் காந்தத்தை நகர்த்துவதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கண்டறிந்தார். வாயுக்களை முதன்முதலில் திரவமாக மாற்றியவரும் இவரே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us