PUBLISHED ON : செப் 17, 2018
தமிழ்ப்பா வகைகளில் வெண்பா மிகவும் இனிமையானது. அத்தகைய வெண்பா பாடுவதில், புகழேந்தி வல்லவர். 'வெண்பாவுக்கோர் புகழேந்தி' எனப் புகழப்படுகிறார்.
இவர், வரகுண பாண்டியனின் அரசவைப் புலவராக இருந்தார்; அரசரின் மகளுக்கும் ஆசிரியராக இருந்தார். சோழன் இரண்டாம் குலோத்துங்கனை இளவரசி மணம்முடித்தார். இளவரசியுடன், புலவர் புகழேந்தியும் சீதனமாக சோழ நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், சோழனின் அவைப்புலவர் ஒட்டக்கூத்தர், புகழேந்தியிடம் பகைமை பாராட்டினார். எனவே, அங்கிருந்து விலகி, உறையூரை அடுத்த, மள்ளுவ தேசத்தை ஆண்ட, 'முரணைநகர்' சந்திரன் சுவர்க்கி என்னும் சிற்றரசரிடம் சென்றுவிட்டார்.
அங்குதான், நள தமயந்தி கதையை, 'நளவெண்பா' என்ற பெயரில் எழுதினார் புகழேந்தி.
இந்நூலில், ஆறு பாடல்களில் மன்னர் தன்னை ஆதரித்த, சந்திரன் சுவர்க்கியைப் புகழ்ந்துள்ளார் புகழேந்தி.
- த.சங்கர்.
