sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

அற்புத ஆங்கிலம்: இரு சொல் சேர்ந்தால்...

/

அற்புத ஆங்கிலம்: இரு சொல் சேர்ந்தால்...

அற்புத ஆங்கிலம்: இரு சொல் சேர்ந்தால்...

அற்புத ஆங்கிலம்: இரு சொல் சேர்ந்தால்...


PUBLISHED ON : ஜன 06, 2025

Google News

PUBLISHED ON : ஜன 06, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆங்கிலச் சொற்களில் சில வித்தியாசமான சொற்களைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எடுத்துக்காட்டாக, Brunch என்னும் சொல். இது எதைக் குறிக்கிறது என்பது உங்களில் சீனியர்களுக்குத் தெரிந்திருக்கும். Breakfast, Lunch ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையே இது. காலையில் சாப்பிடுவது Breakfast. மதியம் உண்பது Lunch. காலையும் இல்லாத, மதியமும் ஆகிவிடாத முற்பகல் 11 மணியளவில் உண்டால் அதற்குப் பெயர் Brunch என்று வைத்திருக்கிறார்கள். ஒரே உணவு, காலை வேளைக்கும் மதியத்துக்கும் சேர்த்து உண்பது என்று ஆகிறது.

இப்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள், அவற்றின் பொருளோடு இணைத்து உருவாக்கப்படுவதற்கு ஒரு பெயர் இருக்கிறது. Portmanteau என்பதே அது. Brunch என்பது போன்ற வேறு சில Portmanteau சொற்களைப் பார்ப்போம்.

புகை, பனிமூட்டம் இரண்டும் சேர்ந்தால்

Smog - Smoke + Fog

பசி, கோபம் இரண்டும் சேர்ந்தால்

Hangry - Hungry + Angry

நெடுஞ்சாலை, உணவகம் இரண்டும் சேர்ந்தால்

Motel - Motorway + Hotel

சிறு கரண்டியும் முள்கரண்டியும் சேர்ந்தால்

Spork - Spoon + Fork

நண்பன், எதிரி இரண்டும் சேர்ந்தால்

Frenemy - Friend + Enemy.

இன்னும் சில எடுத்துக்காட்டுகள்:

Chocoholic - Chocolate + Alcoholic

Workaholic - Work + Alcoholic

Shopaholic - Shop + Alcoholic

Infomercial - Information + Commercial

Edutainment - Education + Entertainment






      Dinamalar
      Follow us