
உலகில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. நீங்களும் அவற்றை நம் நாளிதழில் தினமும் படித்து வருவீர்கள். அதை வைத்து இங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குச் சரியான விடையைச் சொல்லுங்கள். பதில் தெரியாதவர்கள், உடனே விடையைப் பார்க்க முயற்சி செய்ய வேண்டாம். ஏற்கெனவே நீங்கள் படித்த சம்பவங்கள் தான் என்பதால், நினைவிலிருந்து யோசித்துக் கண்டுபிடியுங்கள்!
1. வரும் ஆண்டுகளில், எந்த மாதத்தின் இறுதி வாரம், திருவள்ளுவர் வாரமாகக் கொண்டாடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது?
அ. ஜனவரி
ஆ. ஜுன்
இ. மார்ச்
ஈ. டிசம்பர்
2. தமிழகத்தில் புதிதாக, எத்தனை நகராட்சிகள், பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டு உள்ளன?
அ. 10, 22
ஆ. 13, 25
இ. 20, 24
ஈ. 16, 23
3. உள்நாட்டு விமானங்களில், எந்த வசதியை வழங்கும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெயரை, ஏர் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது?
அ. ஜிம்
ஆ. ஹோட்டல்
இ. வைஃபை
ஈ. பிளே ஸ்டேஷன்
4. ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ள, நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில், எந்த மாநில முதல்வர் முதலிடத்தில் (ரூ. 931 கோடி) உள்ளார்?
அ. மு.க.ஸ்டாலின் (தமிழகம்)
ஆ. சந்திரபாபு நாயுடு (ஆந்திரம்)
இ. யோகி ஆதித்யநாத் (உ.பி.)
ஈ. சித்தராமையா (கர்நாடகம்)
5. 'இந்தியாவின் நண்பர்' என்று போற்றப்படும், அமெரிக்காவின் 39வது அதிபர் சமீபத்தில் காலமானார். இவரது பெயரில், ஹரியாணா மாநிலத்தில் ஒரு கிராமம் உள்ளது. அவர் யார்?
அ. உட்ரோ வில்சன்
ஆ. ஜெரால்டு போர்டு
இ. ஜிம்மி கார்ட்டர்
ஈ. ரிச்சர்டு நிக்சன்
6. உத்தரப்பிரதேச மாநிலத்தில், பக்தர்கள் புனித நீராடும் மகா கும்பமேளா நிகழ்வை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடாக, நீருக்கடியில் 328 அடி ஆழம் வரை சென்று கண்காணிக்கும், எத்தகைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த, மாநில அரசு முடிவு செய்துள்ளது?
அ. ட்ரோன்
ஆ. நீர்மூழ்கிக் கப்பல்
இ. ரோபோடிக்ஸ்
ஈ. கிளைடர்
7. அமெரிக்கப் பத்திரிகையான 'போர்ப்ஸ்' வெளியிட்டுள்ள, 2024ஆம் ஆண்டிற்கான, உலகின் அதிகம் சம்பாதிக்கும் பாட்மின்டன் வீராங்கனை பட்டியலில், முதலிடம் பிடித்துள்ள இந்திய வீரர்?
அ. சாய்னா நேவல்
ஆ. ஜுவாலா கட்டா
இ. பி.வி.சிந்து
ஈ. லக்ஷயா சென்
8. ஆமதாபாத்தில் நடந்த, 'விஜய் ஹராரே டிராபி' கிரிக்கெட் தொடரின் 32வது சீசனில், மும்பை அணிக்காக விளையாடி, 150 ரன்னுக்கும் மேல் விளாசிய இளம் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்துள்ளவர்?
அ. ரகுவன்ஷி
ஆ. ஆயுஷ் மாட்ரே
இ. சித்தேஷ்
ஈ. பிரசாத்பவார்
விடைகள்: 1. ஈ, 2. ஆ, 3. இ, 4. ஆ, 5. இ, 6. அ, 7. இ, 8. ஆ.