PUBLISHED ON : ஜன 06, 2025

1. கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகளில் ஸ்தாயியுடன் ஒத்துப்போகும் மேற்கத்திய காற்றிசைக் கருவி?
_____________________
2. கர்நாடக சங்கீதம் வாசிக்க ஏற்ற மேற்கத்தியத் தந்தி இசைக்கருவிகள் சில
_____________________
3. கணிதப் புதிர் போல உள்ள கர்நாடக சங்கீதப் பயிற்சிப் பாடங்களின் பெயர்?
_____________________
4. இசை மாணவர்கள் ராக ஆலாபனை செய்ய ஏற்ற மிக எளிதான வர்ணம் எது?
_____________________
5. சினிமாக்களில் காட்டுவது போல அதிகாலையில் கழுத்தளவுத் தண்ணீரில் மூழ்கிப் பாடிப் பயிற்சி செய்தால் கமகங்களை எளிதில் பாடமுடியுமா?
_____________________
6. கடினமான கீர்த்தனை பாடும்போது ஒரு ராகத்தில் இருந்து மற்றொரு ராகத்துக்குத் தாவ உதவும் முறை?
__________________
விடைகள்:
1. சோப்ரானோ சாக்ஸபோன்
2. மேண்டலின், கிதார்
3. அலங்காரம்
4. மோகன வர்ணம்
5. முடியும்
6. ஸ்ருதி பேதம்