தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/அசத்தும் கால்கள்

அசத்தும் கால்கள்

அசத்தும் கால்கள்


PUBLISHED ON : ஆக 06, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 06, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பறவைகள் இடம்பெயர்தலுக்கும், இரையைப் பிடிக்கவும், உடல் வெப்பநிலையைச் சமப்படுத்துவதிலும் அவற்றின் கால்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. பறவைகளின் கால்கள் வாழிடம், உடலமைப்பு இவற்றுக்கு ஏற்றபடி அமைந்துள்ள பாதங்கள் சில வகைகளைக் காண்போம்.

நீரில் நடக்கும் பாதம் Wading Foot - வாடிங் ஃபுட்

நீரின் மேற்பரப்பில் வாழும் பூச்சிகள், மீன்களைப் பிடிக்க, நீரில் நடந்து செல்ல ஏதுவானவை. கால்களைப் பின்னிப்பின்னி கீழே விழாமல் சமநிலைப்படுத்தி நீரிலும் சேற்றிலும் நடப்பதற்கு ஏற்ற வகையில் நீளமான கால்களாக அமைந்திருக்கும்.

நீந்தும் பாதம் Swimming Foot - ஸ்விம்மிங் ஃபுட்

நீரில் நீந்திச்சென்று நீருக்குள் வாழும் மீன்களைப் பிடிக்க ஏதுவானவை. நிலத்தில் நடக்கவும் இவ்வகைப் பாதங்கள் உதவுகின்றன. கால்கள், துடுப்பு போன்று நீரை பின்னுக்குத் தள்ளும்.

ஏறும் பாதம் Climbing Foot - கிளைம்பிங் ஃபுட்

மரத்தில் உள்ள பூச்சி, கரையான் போன்றவற்றை உண்ணும் பறவைகளுக்கு இப்பாதங்கள் இருக்கும். மரத்தண்டு, கிளைகளைப் பிடிப்பதற்கு ஏற்றவாறு இவை அமைந்துள்ளன. பாதங்களில் 2 விரல்கள் முன்னோக்கியும் 2 விரல்கள் பின்னோக்கியும் தனித்தனியாக இருக்கும்.

பற்றிப் பிடிக்கும் பாதம் Grasping Foot- கிராஸ்ப்பிங் ஃபுட்

உயிருள்ள விலங்குகளை வேட்டையாடிப் பிடித்துண்ணுவதற்கு தகுந்தாற்போல் வலிமையாகவும் நகங்கள் கூர்மையாகவும் இருக்கும். இரைகளைக் கொல்ல ஏதுவாக இருக்கும். பாதங்களில் 3 விரல் முன்னோக்கியும் 1 விரல் பின்னோக்கியும் தனித்தனியாக அமைந்திருக்கும்.

இருப்புநிலை பாதம் Perching Foot - பெர்ச்சிங் ஃபுட்

சிறிதுதூரம் மட்டுமே தத்தித்தத்திச் செல்ல உதவும் பாதங்கள். நடந்து சென்று தாவரங்கள், சிறு பூச்சிகளை உண்பவை. நிலத்திலும், மரக்கிளைகளிலும் கீழே விழாமல் உட்கார்ந்து உண்ணுவதற்கு ஏற்ப அமைந்துள்ளன. பாதங்களில் 3 விரல்கள் முன்னோக்கியும் 1 விரல் பின்னோக்கியும் தனித்தனியாக இருக்கும்.

- கிருபா நந்தினி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us