PUBLISHED ON : ஆக 06, 2018

ஒடிசா மாநிலத்தில் கட்டாக் அருகில் அமைந்துள்ளது சில்கா ஏரி. வங்கக் கடலில், மகாநதியின் முகத்துவாரப் பகுதியில் உள்ளது. பரப்பளவு 1,165 ச.கி.மீ. உப்பு நீரும், நல்ல நீரும் கலந்துள்ள இந்த ஏரி, இந்தியாவின் மிகப்பெரிய உவர் நீர் ஏரி (Brakish Water). இதன் தனித்துவமான நீர் அமைப்பால் பல்வேறு கடல் தாவரங்கள், மீன்கள் வளம் நிறைந்த பகுதியாக இது உள்ளது. குளிர்காலத்தில் ஏராளமான பறவைகள் இங்கு வலசை வருகின்றன. ஏரியின் நடுவில் நலபன் தீவு(Nalaban Island) அமைந்துள்ளது. இந்தத் தீவு பறவைகள் சரணாலயமாகவும், சுற்றுலா தலமாகவும் உள்ளது. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ஈர நிலங்களுக்கான ராம்சார் உடன்படிக்கையில் (Wetland of International Importance under the Ramsar Convention) 1981இல் சேர்க்கப்பட்ட முதல் ஈர நிலப் பகுதி (Wetland - வெட்லேண்ட்) இது.
- ப.கோபாலகிருஷ்ணன்
