உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 17, 2018

அ நிறம் | அளவு
பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியில், அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்திலேயே செளதி அரேபியாவை முந்தியதாகக் கூறிய அமெரிக்க எரிசக்தி நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதம் எடுக்கப்பட்ட எண்ணெய் அளவைக் கணக்கிட்டு, ரஷ்யாவையும் முந்தி முதலிடம் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
தினமும், செளதி அரேபியா 1.04 கோடி பீப்பாய்களும், ரஷ்யா 1.08 கோடி பீப்பாய்களும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கின்றன. அமெரிக்கா, தினமும் 1.09 கோடி பீப்பாய்களை உற்பத்தி செய்வதாக, அமெரிக்க எரிசக்தி தகவல் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 2019ஆம் ஆண்டிலும், கச்சா எண்ணெய் உற்பத்தியைத் தீவிரப்படுத்தி, முதலிடத்தைத் தக்க வைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
