தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/வேர்கடலை விளைவித்த அமெரிக்க அதிபர்கள்!

வேர்கடலை விளைவித்த அமெரிக்க அதிபர்கள்!

வேர்கடலை விளைவித்த அமெரிக்க அதிபர்கள்!


PUBLISHED ON : ஜூலை 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலை மிட்டாய் , கடலை பர்பி பிடிக்கும்தானே உங்களுக்கு? அது எதிலிருந்து செய்யப்படுகிறது? வேர்க்கடலையில் இருந்து. வேர்க்கடலையை, நிலக்கடலை (Groundnut - கிரவுண்ட் நட்) என்றும் அழைக்கிறோம். சில ஊர்களில் மல்லாட்டை (மணிலா கொட்டை) என்பார்கள். நிலத்துக்கு அடியில் விளையக் கூடியது. பட்டாணிக் குடும்பத்தைச் சேர்ந்தது. புரதச் சத்து நிறைந்தது. இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் சமையலுக்குப் பயன்படுகிறது. இதன் புண்ணாக்கு, கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுகிறது.

ஆலன் ஷெப்பர்ட் (Alan Shepard) என்பவர் அமெரிக்க விண்வெளி ஆய்வாளர். அவர் அப்பல்லோ 14 (Apollo 14) என்ற விண்கலத்தில் 1971ல் நிலாவிற்குச் சென்றார். அவருக்கு வேர்க்கடலை மிகவும் பிடிக்கும். எப்போதும் பாக்கெட்டிலேயே வைத்திருப்பார். அவர் விண்வெளிக்குச் செல்ல தேர்வான போதும், கொஞ்சம் கடலையை எடுத்துச் சென்றார் என்று சொல்வார்கள்.

அமெரிக்காவின் அதிபர்களாக இருந்த தாமஸ் ஜெபர்சன் (Thomas Jefferson), ஜிம்மி கார்ட்டர் (Jimmy Carter) இருவரும் அதிபராவதற்கு முன் வேர்க்கடலை விவசாயம் செய்தவர்கள்!

மூவாயிரம் வருடங்களுக்கு முன் பெரு நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் வேர்க்கடலையைப் பயிரிட்டு கடவுளுக்குப் படைத்திருக்கிறார்கள். அங்கே தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த மட்பாண்டங்களில் வேர்க்கடலையின் தோல் வரையப்பட்டிருப்பதைக் கண்டறிந்து இருக்கிறார்கள்.

வேர்க்கடலை உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடம், அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us