தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/ககபோ...

ககபோ...

ககபோ...


PUBLISHED ON : ஜூலை 04, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 04, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தலைப்பைப் பார்த்ததும் பிரபல காமெடி வசனம் ஞாபகத்துக்கு வந்தால் அதை மறந்துவிடுங்கள். இது ஒரு பறவையின் பெயர்!

'அட, இப்படி ஒரு பெயர் கொண்டப் பறவை எங்கிருக்கிறது' என்று ஆச்சரியம் எழுகிறதா? அதை விட இன்னொரு ஆச்சரியம் அது நாம் அறிந்த பறவைகளில் ஒன்று என்பது. உடனே மயில்,புறா, மைனா என்று நீங்கள் சிறகு விரிக்கும் முன் சொல்லி விடுகிறோம்... அந்தப் பறவை கிளி.

நியூசிலாந்தில் உள்ள பறக்கத் தெரியாத கிளிகளுக்குத்தான் ககபோ (kakapo) என்று பெயர். இவை தரையிலேயே கூடுகட்டி வசிக்கின்றன. உலகில் பிக்மி பேரட் (pygmy parrot) என்ற பெயருள்ள கிளி இனம்தான் மிகவும் சிறியது. சுமார் எட்டு செ.மீ. முதல் பத்து செ.மீ. வரை மட்டுமே வளரும். சாலமன் தீவுகள் (Solomon Islands), பப்புவா நியூ கினியா (Papua New Guinea) நாடுகளில் இது காணப்படுகிறது.

கிளியை வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள். சரணாலயங்களிலும் வளர்க்கப்படுகின்றன. 'லவ் பேர்ட்' கிளி இனத்தில் ஒரு வகை. ஆப்பிரிக்கா இதன் தாயகம். உடலில் ஐந்து நிறங்கள் கொண்ட கிளிக்கு பஞ்ச வர்ணக் கிளி என்று பெயர்.

உலகம் முழுக்க சுமார் 350க்கும் மேற்பட்ட இனங்கள் கிளிகளில் உண்டு. பச்சை நிறத்தில் மட்டும் அல்ல, சிவப்பு, மஞ்சள், நீலம், வெள்ளை நிறங்களில் இறக்கைகள் கொண்ட கிளிகளும் இருக்கின்றன. மூக்கும் சிவப்பு, கறுப்பு, வெள்ளை, மஞ்சள் நிறங்களில் காணப்படுகின்றன. ஆப்ரிக்காவில் சாம்பல் நிறத்தில் உள்ள கிளிகளைப் பார்க்கலாம்.

விதைகள், பழங்கள், பூக்கள் போன்றவற்றை உணவாக எடுத்துக்கொள்கின்றன. கிளிகள் மரப்பொந்துகளில் வசித்தாலும் சில இடங்களில் கூடுகட்டியும் வாழ்கின்றன.

* கிளிஇனத்தில் 350க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.

* டோமினிகா (Dominica) நாட்டின் தேசியக்கொடியில் கிளி இடம் பெற்றுள்ளது.

* சிலவகை கிளிகள் 80 வருடங்கள் வரை உயிர்வாழும்.

* அமெரிக்காவில் நாய், பூனை, மீனுக்கு அடுத்தபடியாக வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் பிராணி கிளி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us