தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/அமிழ்தமிழ்து: தலையைக் கண்டுபிடியுங்கள்

அமிழ்தமிழ்து: தலையைக் கண்டுபிடியுங்கள்

அமிழ்தமிழ்து: தலையைக் கண்டுபிடியுங்கள்


PUBLISHED ON : மார் 31, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2025


Follow on Google
அ நிறம் | அளவு

'தலை' என்ற சொல் உடல் உறுப்பினை மட்டும் குறிப்பதில்லை. அதனை முன்னொட்டாகக் கொண்டு, எண்ணற்ற சொற்களையும் பயன்படுத்துகிறோம்.

உடலின் முதன்மை உறுப்பு என்பதனால் உயர்வான அனைத்தையும் 'தலை' என்ற சொல்லில் குறிக்கிறோம். எண்ணிக்கையில் முதலாவதாக இருப்பதனையும் 'தலை' என்று சேர்த்துக் கூறுவோம். இங்கே 'தலை' என்ற முன்னொட்டு அமைந்த சொற்களுக்கான குறிப்புகள் தரப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு உரிய சொற்களை எழுதுங்கள்.

அ. வீட்டின் முதன்மையான நுழைவு வழி.

______________________________

ஆ.குடும்பத்தின் மூத்த பிள்ளை.

______________________________

இ. செருக்கு.

______________________________

ஈ. ஒன்றில் இன்னொருவர் புதிதாக நுழைவது.

______________________________

உ. மிகச் சிறந்தது.

______________________________

ஊ. முனைப்பகுதியோடு அறுக்கப்பட்ட வாழையிலை.

______________________________

எ. அலுத்துக்கொண்டு விதியினைக் குறிப்பது.

______________________________

ஏ. பரம்பரையாகத் தொடரும் குடும்ப மரபு.

______________________________

ஐ. பிடிவாதமாய் நிற்றல்.

______________________________

-மகுடேசுவரன்

விடைகள்:

அ. தலைவாயில்

ஆ. தலைப்பிள்ளை/தலைச்சன்

இ. தலைக்கனம்

ஈ. தலையீடு

உ. தலைசிறந்தது

ஊ. தலைவாழையிலை

எ. தலையெழுத்து

ஏ. தலைக்கட்டு

ஐ. தலைகீழாய் நிற்றல்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us