sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

பட்டம்

/

சரித்திரம் பழகு: இடத்தையும் பெயரையும் குறிப்பிடுங்கள்

/

சரித்திரம் பழகு: இடத்தையும் பெயரையும் குறிப்பிடுங்கள்

சரித்திரம் பழகு: இடத்தையும் பெயரையும் குறிப்பிடுங்கள்

சரித்திரம் பழகு: இடத்தையும் பெயரையும் குறிப்பிடுங்கள்


PUBLISHED ON : மார் 31, 2025

Google News

PUBLISHED ON : மார் 31, 2025


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

1. சென்னையில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று புழல். இதற்கு சோழர் காலத்தில் இன்னொரு பெயர் உண்டு. அது என்ன?

___________________________

2. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தின் மற்றொரு பெயர் தில்லை. இதற்கு இன்னொரு பழமையான பெயர் உண்டு என்பதை நடராஜர் கோயிலில் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. அந்தப் பெயர் என்ன?

__________________________

3. இரண்டாம் குலோத்துங்கன் (பொ.யு.1133 ---1150) காலத்தில், பார்வை இழந்த பதினாறு பேர், ஒரு கோயிலில் தேவாரம் பாடும் திருப்பாட்டு ஓதுவார்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்கு வழிகாட்ட 'கண்காட்டுவார்' என்று அழைக்கப்படும் ஒருவர் இருந்தார். இந்த நிகழ்வு நடந்த கோயில் எங்குள்ளது?

___________________________

4. இந்துஸ்தானத்தின் கிளி என்று அழைக்கப்படுபவர் இவர். கில்ஜி அரசர்களின் அவையில் கவிஞராக இருந்தார். மாலிக்காபூரின் தமிழகப் படையெடுப்பின் போது உடன் வந்து, பயணக்குறிப்புகள் எழுதிய இவர் யார்?

___________________________

5. சன்னியாசிகளை அழைத்து இந்து மத வேதங்களைப் பல மொழிகளில் மொழிபெயர்க்கச் செய்தார். இந்து மத நூல்களின் கருத்துகளை ஏற்றுக்கொண்டார். மொகலாயர்களுக்கான தொழுகை, நோன்பு போன்றவற்றைக் கைவிட்டார் என்று, ஆலம்கீர் நாமா நுால் குறிப்பிடும், ஷாஜகானின் மகன் யார்?

___________________________

விடைகள்:

1. ராஜசுந்தரி நல்லூர்.

2. பெரும்பற்றப்புலியூர்

3. விழுப்புரம் அருகே உள்ள திருவாமாத்தூர்

4. அமீர் குஸ்ரு

5. தாரா ஷிகோ






      Dinamalar
      Follow us