PUBLISHED ON : செப் 16, 2024
இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வோர் எண் வரிசையிலும் மூன்று விஷயங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. ஒன்று மட்டும் தொடர்பில்லாதது. அதைக் கண்டறிந்து நீக்குங்கள். காரணம் விடையில் உள்ளது.
1) மணிமேகலை, நீலகேசி, சூளாமணி, யசோதர காவியம்
2) பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், அப்பர்
3) தொல்காப்பியம், கம்பராமாயணம், வீரசோழியம், நன்னூல்
4) பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, நன்னன், தொண்டைமான் இளந்திரையன், பராந்தக நெடுஞ்சடையன்
5) கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, இருண்ட வீடு, பாஞ்சாலி சபதம்
விடைகள்:
1) மணிமேகலை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று. மற்றவை ஐஞ்சிறுங்காப்பியங்கள்.
2) அப்பர், இவர் பாடல்கள் தேவாரத்தில் உள்ளன. பிறர் எழுதியவை திவ்யப்பிரபந்தத்தில் உள்ளன.
3) கம்பராமாயணம் ஓர் இலக்கியம். மற்றவை இலக்கண நூல்கள்.
4) பராந்தக நெடுஞ்சடையன், மற்றவர்கள் சங்ககால அரசர்கள்.
5) இருண்ட வீடு பாரதிதாசன் எழுதியது. மற்றவை பாரதியின் படைப்புகள்.