
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இரு நண்பர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
ராஜு: ஆமா, கடைசியா அதுக்கான நேரம் வந்துடுச்சு.
சுந்தர்: ஏண்டா, என்னைவிட்டுப் பிரியப் போறியா?
ராஜு: இல்லை.
சுந்தர்: உனக்கு என்னைப் பிடிக்குமா?
ராஜு: ஆமாம். ரொம்ப.
சுந்தர்: நீ என் கிட்டப் பொய் சொல்லுவியா?
ராஜு: சீச்சீ மாட்டவே மாட்டேன், ஏன் இப்பிடிக் கேக்குறே?
சுந்தர்: என் கையைப் பிடிச்சுப்பியா?
ராஜு: ஆமா, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம்.
சுந்தர்: என்னை அடிப்பியா?
ராஜு: சான்ஸே இல்லை.
சுந்தர்: உன்னை நம்பலாமா?
ராஜு: ம்...
சுந்தர்: ஹே ஃப்ரெண்ட்...
இதில் ராஜு நல்ல பையனா, இல்லையா?
'ஆமாம்' என்று சொல்வீர்கள்.
இப்போது, இதே விஷயத்தை, கீழ் இருந்து மேலாகப் படியுங்கள்.
இப்போது சொல்லுங்கள், ராஜு நல்ல பையனா?