
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மலேரியாவால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுப்பது, மருத்துவ உலகின் சவாலாக இருந்து வருகிறது. இதனால், ஆண்டுதோறும் 4.35 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் ஆப்பிரிக்க குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். தற்போது, 30 ஆண்டு கால ஆய்வின் பயனாக ஆர்.டி.எஸ்.எஸ் RTS,S/AS01 (RTS,S) என்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, ஆப்பிரிக்க நாடான மலாவியில் இந்தத் தடுப்பூசி அமலுக்கு வந்துள்ளது.

