PUBLISHED ON : டிச 11, 2017

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய நன்னீர் ஏரி விக்டோரியா. உலகின் இரண்டாவது பெரிய ஏரியான இதனைச் சுற்றி கென்யா, தான்சானியா, உகாண்டா ஆகிய நாடுகள் உள்ளன. நைல் நதியின் பிறப்பிடமாகச் சொல்லப்படும் இதில் சில ஆண்டுகளாக பிளாஸ்டிக் குப்பைகள், சாக்கடைகள், கழிவுகள் கலக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஏரி கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
பொதுவாக நீர்நிலைகளைச் சுத்தப்படுத்துவது மீன்களின் முக்கிய பணி. தங்களின் வாழ்வாதாரத்திற்காக அவற்றை அளவுக்கு அதிகமாக அப்பகுதி மக்கள் பிடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் விஞ்ஞானிகளின் கூற்று, இயற்கை ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

