தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/பட்டம்/கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து!

கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து!

கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து!


PUBLISHED ON : டிச 11, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 11, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐக்கிய நாடுகளின் பெருங்கடல்கள் பிரிவின் தலைவர் லிசா ஸ்வென்சன் (Lisa Svensson) கடலில் பெருகி வரும் நெகிழிக் (Plastic-பிளாஸ்டிக்) கழிவுகளின் அபாயம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். சீராக்க முடியாத அளவிற்கு கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வு பாதிக்கப்பட்டு வருவதாகவும், இது உலகம் முழுமைக்குமான அபாயம் என்றும் தெரிவித்துள்ள அவர், அரசுகள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் என பாகுபாடின்றி எல்லாத் தரப்பினரும் சேர்ந்து நெகிழி மாசுபாட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். 2025ஆம் ஆண்டுக்குள் கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை கணிசமான அளவு ஒழிப்பது எனும் ஐ.நா.வின் நீண்டகால இலக்கை அடைய அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us